இந்தியா-இங்கிலாந்து நிபுணர்களின் கூட்டு முயற்சியில் டிஜிட்டல் வடிவில் ராமாயணம் தயாரிக்கப்பசடுகிறது.
இங்கிலாந்கில் உள்ள பிரி்ட்டிஷ் நூலகம் இந்தியாவில் மும்பைில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் வாஸ்து அருங்காட்சியகம் ஆகியவற்றின் நிபுணர்கள், இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சிதறி இருந்த சுமார் 150 ஆண்டு பழமையான மேவார் ராமாயணத்தின் பிரதிகளை திரட்டினர்.
ஏற்கெனவே மும்பையில் இருந்த வேல்ஸ் அருங்காட்சியகம் இவற்றை திரட்டி இருந்தது. இந்த மேவார் ராமாயணம் 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கருதப்படுகிறது. கடந்த 1649-ம் ஆண்டு மேவார் அரசர் முதலாம் ரானா ஜகத்சிங் காலத்தில் ராமாயணப் பிரதிகள் முழுவதும் திரட்டப்பட்டு 400 அழகிய வண்ண வேலைப்பாடுகளுடன் கூடிய ஓவியங்களும் சேர்த்து எழுதும் பணி நடைபெற்றது. பின்னர் இது பல்வேறு நாடுகளுக்கும் சிதறி விடவே தற்போது இதன் 80 சதவீத பக்கங்கள் டிஜிட்டல்மயப்படுத்தப் பட்டது. மீதமுள்ள பக்கங்கள் பரோடா மியூசியம், ராஜஸ்தான் கல்வி மையம் ஆகியவற்றிலிருந்து கொண்டுவரப்பட்டு முழுமைப்படுத்தப்படுகிறது.
இதன் டிஜிட்டல் பிரதி வரும் 21-ம் தேதி வெளியிடப்படும் என இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர். கடந்த ஆண்டு மும்பை வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் ச் கேமரூன் அவற்றைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.