தமிழக மாநில சட்ட ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீதியரசர் டி.சுதந்திரம் உட்பட
உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இதன் தலைவராக ஜார்கண்ட மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் தினகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்போது அந்த அமைப்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதிய உறுப்பினர்களை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_
முதல்வர் ஜெயலலிதா மாநில சட்ட ஆணையத்தை திருத்தியமைத்து, மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக ஜார்கண்ட் மாநில உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, நீதியரசர் என்.தினகரனை 27.01.2014 அன்று நியமித்து ஆணையிட்டிருந்தார். இந்த மாநில சட்ட ஆணையத்தின் பிற உறுப்பினர்கள் பின்னர் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
தற்போது, திருத்தியமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக, கீழ்க்கண்டோரை நியமித்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்:_
நீதியரசர் டி.சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி முழுநேர உறுப்பினராகவும்,
ஆர்.விவேகானந்தன், சட்டத்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) முழுநேர உறுப்பினராகவும்,
ஆர்.தயாளன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பகுதிநேர உறுப்பினராகவும்,
ஆர்.முனிரத்தினம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பகுதிநேர உறுப்பினராகவும்,
ஆர்.கதிர்வேல், சட்டத்துறை கூடுதல் செயலாளர்(ஓய்வு) முழுநேர உறுப்பினர் மற்றும் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.