ஆசிய கோப்பை போட்டிக்கு முன்பு தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸைவிட 2 ரேட்டிங் புள்ளிகள் பின்தங்கியிருந்தார் கோலி. ஆசிய கோப்பை போட்டியில் ஒரு சதம் உள்பட 189 ரன்கள் குவித்ததன் மூலம் 12 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற கோலி, மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
இந்தியாவின் ஷிகர் தவண் 3 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தையும், ரோஹித் சர்மா ஓர் இடம் முன்னேறி 22-வது இடத்தையும், ரவீந்திர ஜடேஜா 12 இடங்கள் முன்னேறி 50-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இலங்கை வீரர் திரிமானி 29 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசை. டிவ்லியர்ஸ் 2-வது இடத்திலும், ஆஸி வீரர் பெய்லி 3-வது இடத்திலும் உள்ளனர்.