
40 வயதுக்குள்பட்ட இளம் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் பட்டியலை பார்ச்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பார்ச்சூன் 40 பட்டியலில் 7 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 40 வயதுக்குள்பட்ட தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தகுதி அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தெராமில் நுவோபயலாஜிக்ஸ் நிறுவன இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (சிஓஓ) கவிதா ஐயர் ரோட்ரிக்ஸ் இடம்பெற்றுள்ளார். முதல் முறையாக உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய பெருமையும் இவரையே சாரும். இதேபோல ஜிவேம் டாட் காம் நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சா கர் இடம்பெற்றுள்ளார்.