நாடாளுமன்றத்தில் அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த “தி இன்டர்-பார்லிமென்ட் யூனியன்” என்ற அமைப்பு சார்பில் உலக நாடுகளின் நாடாளுமன்றங் களில் அதிக பெண் உறுப்பினர் கள் கொண்ட நாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப் படுகிறது. நடப்பாண்டு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.
இதில் மொத்தம் 189 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் இந்தியா 111-வது இடத்தில் உள்ளது. இந்திய மக்களவையில் 62 பெண் உறுப்பினர்கள் உள்ள னர். அவையின் மொத்த பலமான 545 உறுப்பினர்களுடன் ஒப்பிடும் போது இது வெறும் 11.4 சதவீதம் மட்டுமே.
இதேபோல் இந்திய மாநிலங் களவையில் 28 பெண் உறுப்பி னர்கள் உள்ளனர். அந்த அவை யின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையான 245-ல் இது வெறும் 11.4 சதவீதம் மட்டுமே.
அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வரிசைப் பட்டியலில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ருவாண்டா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் நாடாளு மன்ற உறுப்பினர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள். அதைத் தொடர்ந்து அன்டோரா, கியூபா, சுவீடன், தென்ஆப்பிரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித் துள்ளன.
அமெரிக்கா 83-வது இடத்தி லும் கனடா 54-வது இடத்திலும் உள்ளன. தெற்கு ஆசிய நாடாளு மன்றங்களில் அதிக பெண் உறுப்பினர்களை கொண்ட நாடாக நேபாளம் உருவெடுத்துள்ளது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் 30 சதவீதம் பேர் பெண்கள்.
மைக்ரோனேசியா, பலாலு, கத்தார், வானாட்டு உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களில் பெண் உறுப்பினர்களே இல்லை. அந்த நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன.