சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) கனெக்ட் கார்ட் எனப்படும் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. விசா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அட்டை இளம் தலைமுறையினரைக் கருத்தில்கொண்டு கொண்டு வரப்பட்டது. இந்த அட்டை 5 லட்சம் விற்பனையகங்களில் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஏற்கெனவே அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஐஓபி வங்கி ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டை வழங்கியுள்ளது.இப்போது அறிமுகப் படுத்தப்பட்ட கனெக்ட் கார்டானது இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து லட்சம் விற்பனையகங்களில் ஏற்கப்படும் இந்த கனெக்ட் கார்ட் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கும் செய்யலாம். மின்னணு வணிகப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய பரிமாற்றங்களுக்கு வாங்கும் தொகையில் 5 சதவீத பணத்தை திரும்ப அளிக்கும் சலுகையை வங்கி அளித்துள்ளது. இது தவிர சேனல் பைனான்சிங் எனப்படும் நிதிச் சேவையை தனது நிறுவனங்கள் மற்றும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்ளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.