இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியர் ரவி பாட்டியா வுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் கௌரவ டாக்டர் பட்டம் பெறும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை ரவி பாட் டியா பெற்றுள்ளார்.
பிரிமஸ் ஆஸ்திரேலியா தொலைத் தொடர்பு நிறுவனத்தின் நிறுவனரான ரவி பாட்டியா, ஸ்விம்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு அளித்த சிறப்பான பங்களிப்பை பாராட்டி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஐஐடி-யில் படித்தவரான ரவி பாட்டியா விக்டோரியா மாகாண இந்திய ஆஸ்திரேலிய தொழில் கூட்டமைப்பின் தலைவர் பதவி உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகிறார்.