தென்னாப்பிரிக்க சுதந்திரப் போராட்டத்தில் வாழ்நாள் சேவையாற்றியதற்காக மகாத்மா காந்தியின் பேத்தி, இலா காந்திக்கு அந்நாடு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
தமிழில் “தியாகம்” என்று பொருள்படும் இந்த விருது அந்நாட்டு ராணுவம் சார்பில் வழங்கப்பட்டது. இலா காந்தி, சன்னி சிங், மெக் மகராஜ் ஆகிய 3 இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்கர்கள் உள்பட, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் போராட்ட அணியில் இடம் பெற்றிருந்த பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விருதை பெற்றுக்கொண்ட இலா காந்தி, “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படை உறுப்பினராக நான் ஒருபோதும் இருந்ததில்லை. என்றாலும் இந்த விருதை கௌரவக் குறைவாக நான் கருதவில்லை” என்றார்.
டர்பன் நகரில் உள்ள பீனிக்ஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து தான், நிறப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டங்களை மகாத்மா காந்தி வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த பீனிக்ஸ் குடியிருப்பு உள்பட பல்வேறு இடங்களில் இலா காந்தி சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
விருது குறித்து சன்னி சிங் கூறுகையில், “42 ஆண்டுகளுக்கு முன் தென் ஆப்பிரிக்க விடு தலைப் போராட்டத்தில் நான் இணைந்தபோது, எதிர்காலத் தில் விருது வழங்கி கௌரவிக்கப் படுவோம் என நான் எண்ணிய தில்லை. நிறவெறிக்கு எதிராக போராட்டத்தில் கிடைத்த வெற்றி யையே மிகப் பெரிய விருதாக நான் கருதுகிறேன்” என்றார்.