Sunday, March 9, 2014

அமெரிக்க ராணுவத்துக்காக ஜீரோ பிரஷர் டயர்

அமெரிக்க ராணுவ பயன்பாட்டுக் காக ஜீரோ பிரஷர் டயரை அமெரிக்கவாழ் இந்தியருக்குச் சொந்தமான நிறுவனம் தயாரித் துள்ளது. ஒகியோ மாகாணம், அக்ரோ னைச் சேர்ந்த அமெரிக்க என்ஜினீ யரிங் குரூப் (ஏ.இ.ஜி.) நிறுவனம் டயர் தயாரிப்பில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனம் தற்போது அமெரிக்க ராணுவத்துக்காக பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2011-ல் ரன் பிளாட் டயர் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இதன்மூலம் ராணுவ வாகனங்களின் டயர்கள் பஞ்சரானாலும் 50 மைல் வேகத்தில் தொடர்ந்து 300 மைல்கள் தொலைவுவரை வாகனங்களை இயக்க முடியும்.
இந்நிலையில் அமெரிக்க ராணுவத்துக்காக ஜீரோ பிரஷர் டயரை ஏ.இ.ஜி. நிறுவனம் தயாரித்துள்ளது. சாலையோர குண்டுவெடிப்பு அல்லது துப்பாக்கி குண்டுகளால் டயர்கள் பழுதானாலும் வாகனங்களை தொடர்ந்து செலுத்த முடியும்.
இந்த புதிய தொழில்நுட்பம் ராணுவத் துறையில் மட்டுமல்ல, ஆட்டோமொபைல் துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர் நடத்தும் நிறுவனம்
ஏ.இ.ஜி. நிறுவனத்தின் தலைவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆபிரகாம் பனிகோட் ஆவார். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் மெக் கானிக்கல் இன்ஜினீயரிங் பயின்ற அவர், அமெரிக்காவின் அக்ரோன் பல்கலைக்கழகத்தில் பாலிமர் சயின்ஸ் படித்தார்.