Monday, March 31, 2014

செரீனாவுக்கு 7-வது பட்டம்

மியாமி மாஸ்டர்ஸ் மகளிர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சீனாவின் லீ நாவை வீழ்த்திய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மியாமி மாஸ்டர்ஸ் பட்டத்தை செரீனா வெல்வது இது 7-வது முறையாகும்.

சி.ஐ.ஐ.க்கு புதிய தலைவர் நியமனம்

இந்திய தொழிலக கூட்டமைப் பின் (சி.ஐ.ஐ.) புதிய தலை வராக அஜய் ஸ்ரீராம் நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் டி.சி.எம்.ஸ்ரீராம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். 2014-15-ம் ஆண்டுக்கான தலைவராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெளிநாட்டுக்கடன் 42,600 கோடி டாலர்

வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்றுள்ள கடன் தொகை டிசம்பர் மாதம் 42,600 கோடி டாலராகும். இதில் அரசு பெற்றுள்ள கடன் தொகை மட்டும் 7,640 கோடியாகும் இது மொத்தக் கடன் தொகையில் 18 சதவீதமாகும். முந்தைய ஆண்டு டிசம்பரில் இது 8,170 கோடி டாலராக இருந்தது என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 இபிஎப் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு

தொழிலாளர் சேமநல நிதி வாரியம் (இபிஎப்ஓ) 68 தனியார் பி.எப். அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு சலுகை அளித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

2 உணவு பதப்படுத்தல் பூங்கா

ஹைதராபாதில் நடைபெற்ற உணவு பதப்படுத்தும் தொழில் தொடர்பான கருத்தரங்கில் (இடமிருந்து) மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சிராஜ் ஹூசைன், கூடுதல் செயலர் ஜெகதீஷ் மீனா மற்றும்(அசோசாம் தெற்கு மண்டல தலைவர் ரவிந்திர சன்னா ரெட்டி | படம்: பி.வி.சிவக்குமார்.ஆந்திர மாநிலத்தில் 2 பிரம்மாண்டமான உணவு பதப்படுத்தல் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு கோதாவரி பகுதியிலும் மற்றொன்று நிஜாமாபாதிலும் அமைய உள்ளது.

பிலிப்பின்ஸில் முஸ்லிம் போராளிகள் அமைதி ஒப்பந்தம்

பிலிப்பின்ஸில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் போராளிகள் குழுவுக்கும் அரசுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. இதன் மூலம் 40 ஆண்டு கால போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பெண் உரிமைக்காகப் போராடும் சவுதி அரேபிய பெண்ணுக்கு விருது

சவுதி அரேபியாவில் பெண்களின் உரிமைக்காகப் போராடும் மஹா அல் முனீப் என்ற பெண்ணுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருது வழங்கி கவுரவித்தார்.

மக்களை கவர்ந்த நாட்டின் மூத்த வாக்காளர்

ஷியாம் சரண் நேகி நாட்டின் மூத்த வாக்காளர் என்று தேர்தல் ஆணையத்தால் கவுரவப்படுத்தப்பட்டுள்ள ஷியாம் சரண் நேகி (97), தோன்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Wednesday, March 26, 2014

அரசு பங்கு விற்பனைக்கு கண்காணிப்புக் குழு: மத்திய நிதி அமைச்சகம் முடிவு

அரசு பங்கு விற்பனையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நியமிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு பங்கு விற்பனையைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பங்குகளை விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் உள்ளிட்ட பிற அரசு நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயல்பாடுகளை புதிதாக நியமிக்கப்பட உள்ள ஓய்வு பெற்ற அதிகாரி கண்காணிப்பார்.

நீர் மேலாண்மை: இந்தியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஐ.நா. விருது

டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழாவில், 2014- ஆம் ஆண்டுக்கான 'வாழ்க்கைக்காக தண்ணீர் விருது' (Water for Life award) இந்தியா மற்றும சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தேர்வு

கன்னடத்தில் வெளியான ‘அவதேஸ் வரி' நாவலை தமிழில் சிறப்பாக‌ மொழிபெயர்ப்பு செய்ததற்காக எழுத்தாளர் இறைடியானுக்கு, 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிப் பெயர்ப்பாளருக்கான‌ ‘சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கான பரிசளிப்பு விழா டெல்லியில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

Thursday, March 20, 2014

பிரிட்டன் தொழிலாளர்களின் நாயகன் டோனி பென்

பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவரும் சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் முன்னாள் அமைச்சருமான டோனி பென், லண்டனில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 88.

பெங்களூரில் முதல் எலக்ட்ரிக் பஸ்

எரிபொருட்களின் விலையும், வாகனங்க‌ள் வெளியேற்றும் புகையும் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்கே வேட்டுவைக்கின்றன. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் 100 சதவீத‌ம் மின்சாரத்தில் இயங்கும் பஸ் (எலக்ட்ரிக் பஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‌து.

எழுத்தாளர் குஷ்வந்த் சிங் காலமானார்

பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 99.