Sunday, June 4, 2017

Current Affairs June 1 -2

சண்முகம் IAS அகாடமி
 நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2017


  1. இந்தியாவில் முதன்முறையாக தெலுங்கானா மாநிலம் டி-வாலட் (T-Wallet ) என்ற ஒரு டிஜிட்டல் பணப்பையை பொது மற்றும் தனியார் நிதி பரிவர்த்தனை செய்ய தொடங்கியது.
  2. வரலாற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா பி.சி.சி.ஐ. நிர்வாகி பதவியை ராஜினாமா செய்தார்.
  3. 2018 ஆம் ஆண்டில் சூரியனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்ய நாசா பார்கர் சோலார் என்ற விண்கலத்தை அனுப்புகிறது .
  4. மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாமிடம் . முதலிடம் சீனா
  5. தென் கொரியாவில் நடைபெறும் சீனாவின் தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் நிதி மந்திரி அருண் ஜேட்லி கலந்து கொள்கிறார் .
  6. பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், பசு படுகொலைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
  7. இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் அமைப்பு \'நவிக்\'( \'NavIC\') 2018 ன் ஆரம்பத்தில் செயல்பட உள்ளது .
  8. ஐ.நா பொதுச்சபை அமைப்பின் அடுத்த ஜனாதிபதியாக ஸ்லோவாக்கிய வெளியுறவு மந்திரி Miroslav Lajcak தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  9. இந்திய அமெரிக்க எழுத்தாளர் ஜும்பா லஹரி 2017 ஆம் ஆண்டு PEN / Malamud விருதினைப் பெறுகிறார் .
  10. இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்த ஆண்டு ESPN World Fame 100 பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  11. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் 18 ம் இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
  12. அமெரிக்காவின் முன்னாள் இந்திய தூதுவர் நிருபமா ராவ் வாஷிங்டனை மையமாகக் கொண்ட சிந்தனைக் குழுவிற்கு பொது கொள்கைக் கூட்டாளியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  13. இந்தியா உலக வங்கியுடன் 36 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  14. உலக பெற்றோர் தினம் - ஜூன் 1
  15. மும்பை, மஸாகோன் டாக் லிமிடெட் தயாரித்த இரண்டாவது ஸ்கார்பியின் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் INS காந்தாரி பாதுகாப்பு படையில் சேர்க்க உள்ளது
  16. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் மானிகா பாத்ரா மற்றும் மவுமா தாஸ் ஆகியோர் முதன் முறையாக தேர்ச்சி பெற்று வரலாற்றை உருவாக்கியுள்ளனர்.
  17. ஒடிசா மாநிலம், சந்திப்பூர் அருகில் 350 கி.மீக்கு அப்பால் இருக்கும் இலக்கைத் துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் பிரித்வி-II ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
  18. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 2015 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இது அமெரிக்க தனது நாடு மற்றும் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும் என்றார் .
  19. நாட்டின் முதல் கடலோர எச்சரிக்கை மையங்கள் ஒடிசாவில் நிறுவப்படவுள்ளது .
  20. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் சீன ஆதரவுடைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) இன் உறுப்பினராக அஸ்தானா உச்சி மாநாட்டில் இணைகிறது .
  21. உலக பால் தினம் : ஜூன் 1
  22. 70 வது உலக சுகாதார அமைப்பின் பொதுக்கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது.
  23. ஐஸ்லாந்து உலகின் மிகவும் அமைதியான நாடு, இந்தியா 137 வது இடத்தில் உள்ளது
  24. நாடக ஆசிரியரான பால்வந்த் கர்கியின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது .
  25. செர்பியாவின் புதிய ஜனாதிபதியாக அலெக்ஸாண்டார் வூசிச் பதவியேற்றார்
  26. 223 வருட பழைமையான , கிண்டி பொறியியல் கல்லூரிக்கு முதல் முறையாக டி.வி. கீதா என்ற பெண்மணி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  27. கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். 
மேலும் படிக்கச் http://tamilcurrentaffairsquiz.shanmugamiasacademy.in/