மியான்மர் நாட்டில் கடந்த 30 வருடங்களுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர்
கூறுகையில், இந்தக் கண்காணிப்பிலி பள்ளி ஆசிரியர்கள் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் ஏப்ரவ் 10-ஆம் தேதி முடிவடையும் இந்த கணக்கெடுப்பில் வீடுவீடாகச் சென்று 1 கோடியே 20 லட்சம் மக்களை கணக்கெடுப்பாளர்கள் சந்திக்கவுள்ளனர், என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சிட்வி பகுதியில் கணக்கெடுப்பின் போது புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.