ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் 2013 ஆண்டின் சம்பளம் வெறும் 1 டாலர் என்று தெரிகிறது.
ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் போன்ற மற்ற தொழில்நுட்பப் பெருந்தலைவர்களின் பட்டியலில் அடுத்ததாக உள்ளார் மார்க்.
இந்த நிலையில் மார்க் ஸக்கர்பெர்கின் 2013 ஆம் ஆண்டின் சம்பளம் 1 டாலர் என்று தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவன பங்கின் மதிப்பு 27 பில்லியன் டாலர் என்று ஃபோர்ப்ஸ் நிதி நாளிதழ் தெரிவித்திருந்த நிலையில், அதன் நிறுவனர் மார்க்கின் சம்பளம் சொற்ப அளவில் வெறும் 1 டாலர் என்பது வியக்க வைப்பதாக உள்ளது.
ஃபேஸ்புக்கில் பணிபுரியும் மற்ற ஊழியர்களின் சம்பளம் மிகவும் அதிகம். இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி டேவிட் எபர்மென்ஸ்ஸின் சம்பளம் 10.5 மில்லியன் டாலர்கள் மற்றும் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஷெரில் சேண்ட் பேர்கின் சம்பளம் 16.1 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.