SHANMUGAM IAS ACADEMY

Sunday, March 2, 2014

ஓ.என்.ஜி.சி. புதிய தலைவர் டி.கே. சராப்

சராப் | கோப்புப் படம்லாபத்தில் செயல்பட்டு வரும் ஓ.என்.ஜி.சி.யின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக தினேஷ் கே சராப் சனிக்கிழமை பொறுப்பேற்றார்.

தற்போது தலைவராக இருக்கும் சுதிர் வாசுதேவா பதவியில் நீடிக்க விரும்பாததால் சராப் நியமிக்கப்பட்டார்.
இத்தனைக்கும் பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வலியுறுத்தியும் வாசுதேவா பதவியில் நீடிக்க மறுத்துவிட்டார்.
இதற்கு முன்பு சராப் ஒ.என்.ஜி.சி.யின் வெளிநாட்டு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வந்தார்.
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த இவர், படிப்பு செலவுக்காக டியூஷன் எடுத்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் முடித்தார். வணிகவியலில் முதுகலை படிப்பும், சி.ஏ.வும் முடித்துள்ளார்.