SHANMUGAM IAS ACADEMY

Monday, March 3, 2014

ஹெச்.பி.சி.எல். புதிய தலைவர் நிஷி வாசுதேவா

பொதுத்துறை நிறுவனமான ஹெச்.பி.சி.எல்-லின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நிஷி வாசுதேவா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் பெண் இவர்.
சுபீர் ராய் பொறுப்புக்கு நிஷி வாசு தேவா நியமிக்கப்பட்டிருக்கிறார். 58 வயதாகும் இவர் ஹெச்.பி.சி.எல். நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநராக இருந்தார்.
2011-ம் ஆண்டு நிஷி வாசுதேவா ஹெச்.பி.சி.எல். நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்தார். கொல்கத்தாவில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் நிர்வாகயியல் பட்டம் பெற்றவர். 36 வருடங்கள், கார்ப்பரேட் ஸ்ட்ரேடஜி, மார்க்கெட்டிங், திட்டமிடல் உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வந்தார். என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை ஆரம்பித்தவர் நிஷி வாசுதேவா.