SHANMUGAM IAS ACADEMY

Saturday, March 1, 2014

லோக்பால் தேர்வுக் குழுவில் பங்கேற்க பாலிநாரிமன் மறுப்பு


லோக்பால் அமைப்பிலுள்ள பல்வேறு பதகவிகளுக்கான நபர்களை தேர்வு செய்யும் குழுவில்  இடம்பெற மூத்த வக்கீல் பாலி நாரிமன் மறுத்துள்ளார். இதுபற்றி மத்திய இணை  அமைச்சர் நாராயணசாமிக்கு எழுதிய கடிதத்தில்  அவர் கூறியுள்ளதாவது:

லோக்பால் போன்ற முக்கியமான அமைப்புகள்  இத்தகைய வழியில் ஏற்படுத்தப்படுவது எனது தாழ்மையான கருத்து. மேல்நிலை மற்றும் கீழ்நிலை என இரு தரப்புகளின் மூலம் பரவலான கருத்தொற்றுமை அடிப்படையில் ஜனநாயக முறையில் லோக்பால் அமைப் பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். 
அதன் காரணமாகவே தகுதி வாய்ந்த சுதந்திரமான துணிச்சல் மிக்க நபர்கள் இந்தத் தேர்வில் விடுபட்டுப் போகலாம் என நான் அஞ்சுகிறேன். இந்தக் குழுவில் இடம்பெற 5 நபர்கள் கொண்ட கமிட்டி யால் நாரிமன் பெயர் பரிந்துரைக்கப் பட் டது.